Thursday 2nd of May 2024 09:37:02 AM GMT

LANGUAGE - TAMIL
.
20ம் திருத்தத்தில் இருந்து 05 மற்றும் 22ஆம் பரிந்துரைகள் நீக்கப்படுகிறது!

20ம் திருத்தத்தில் இருந்து 05 மற்றும் 22ஆம் பரிந்துரைகள் நீக்கப்படுகிறது!


சர்வஜன வாக்கெடுப்பின் ஊடாக நிறைவேற்ற வேண்டும் என உயர் நீதிமன்றத்தால் சுட்டிக்காட்டப்பட்டுள்ள 20ஆம் சட்டமூலத்தின் 5 மற்றும் 22 ஆம் உட்பிரிவுகளை நீக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நீதியமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

இன்று பிற்பகல் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அரசியலமைப்பின் 20ம் திருத்தச்சட்ட மூலத்தின் சில சரத்துக்களை நிறைவேற்றிக்கொள்ள வேண்டுமாயின் 3 இல் 2 பெரும்பான்மைக்கு மேலதிகமாக பொதுசன வாக்கெடுப்பு அவசியம் என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளதாக சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

20 ஆவது திருத்த சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானத்தை இன்று நாடாளுமன்றில் அறிவித்த போதே சபாநாயகர் இதனைக் குறிப்பட்டுள்ளார்.

இதற்கமைய சட்டமூலத்தின் 5 மற்றும் 22 ஆவது சரத்துக்களை நீக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நீதியமைச்சர் அலி சப்ரி குறிப்பிட்டுள்ளார்.

20 ஆம் திருத்தச் சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி, 39 மனுக்களும், 8 இடையீட்டு மனுக்களும் உயர்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

அந்த மனுக்கள் மீதான பரிசீலனைகள், ஐவர் அடங்கிய உயர்நீதிமன்ற நீதியரசர்கள் ஆயம் முன்னிலையில் அண்மையில் இடம்பெற்றன.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, நீதியர்களான புவனேக அலுவிஹார, சிசிர டி ஆப்று, ப்ரியந்த ஜயவர்தன, விஜித் மலல்கொட ஆகிய ஐவர் கொண்ட ஆயம், அந்த மனுக்களை பரிசீலனைக்கு உட்படுத்தியது.

இதையடுத்து, கடந்த 5ஆம் திகதி நீதியரசர்கள் ஆயத்தின் வியாக்கினத்தை சபாநாயகருக்கும், ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE